திண்டிவனத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் முன்னாள் அமைச்சர் மரியாதை

திண்டிவனம்: அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, திண்டிவனத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திண்டிவனம் நகர அ.தி.மு.க., சார்பில் அம்பேத்கரின் 134 வது பிறந்த நாள் விழா, ரோஷணை பகுதியில் கொண்டாடப்பட்டது.
ரோஷணையிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம், திண்டிவனம் எம்.எல்.ஏ., அர்ஜூனன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நகர செயலாளர் தீனதயாளன், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் தேவநாதன், ஜெ., பேரவை நிர்வாகிகள் குமார், ரூபன்ராஜ், சக்திபெரியதம்பி, மாவட்ட மருத்துவர் அணி கோகுல்கிருஷ்ணராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி, கவுன்சிலர்கள் ஜனார்த்தனன், கார்த்திக், நகர இளைஞரணி உதயகுமார், பாசறை நிர்வாகிகள் ஜெயப்பிரகாஷ், கார்த்திக், வழக்கறிஞர் வீரசம்பத், ஐ.டி.பிரிவு காமேஷ், முன்னாள் கவுன்சிலர்கள் வேணுகோபால், அய்யப்பன், திருவேங்கடம்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
மகளுக்கு வரதட்சணை கொடுமை; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் போலீசில் கண்ணீர் புகார்!
-
சவுக்கு சங்கர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை
-
உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
சென்னையில் கொட்டியது கனமழை; சூறைக்காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் சிரமம்!
-
மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் தற்கொலைக்கு முயற்சி: சேலம் பஸ்ஸ்டாண்டில் அதிர்ச்சி!
-
ராமதாஸ் வழிகாட்டுதலில் சித்திரை நிலவு மாநாடு; அன்புமணி பேட்டி