வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பு மாநில செயற்குழு கூட்டம்

விழுப்புரம்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.

கூட்டமைப்பு சேர்மன் மாரப்பன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் கார்த்திகேயன், செயலாளர் விவேகானந்தன், பொருளாளர் காளிதாஸ் முன்னிலை வகித்தனர். கவுரவ தலைவர் வேல் வரவேற்றார். மகளிர் அணி மாநில தலைவர் பிரிசில்லா பாண்டியன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில தலைவர் சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர். மத்திய, மாநில அரசுகள் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். செஞ்சியில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும்.

மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement