கனிமங்கள் கொண்டு செல்ல இ-பர்மீட் நடை சீட்டு அமல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கனிமங்களை வாகனத்தில் கொண்டு செல்ல நடைசீட்டு முறை நடைமுறைக்கு வர உள்ளது.

கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறையின் 2025-26ம் ஆண்டு கொள்கை முடிவின் படி, மாநிலம் முழுவதும் சுரங்கங்களிலிருந்து கனிமங்களை வாகனம் மூலம் கொண்டு செல்ல முதற்கட்டமாக 17 மாவட்டங்களில் கடந்த பிப்., 12ம் தேதி முதல் இ-பர்மிட் முறை அமல்படுத்தப்பட்டது. 2வது கட்டமாக விழுப்புரம் மாவட்டத்தில், வரும் 21ம் தேதி முதல் அனைத்து வகை சுரங்கங்கள், குவாரிகளில் இருந்து கனிமங்களை வாகனம் மூலம் கொண்டு செல்ல இ-பர்மிட் முறையில் மட்டுமே நடை சீட்டு வழங்கும் முறை நடைமுறைபடுத்தப்படும்.

Advertisement