அரசு கல்லுாரி ஆண்டு விழா 

வானுார்: வானுார் அரசு கலை மற் றும் அறிவியல் கல்லுாரி ஆண்டு விழா மற் றும் விளையாட்டு விழாநடந்தது.

தமிழ்த் துறை தலைவர் இளங்கோ வரவேற்றார். கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கி, ஆண்டறிக்கை வாசித்தார்.

உடற்கல்வி இயக்குநர் அரங்க பண்பில்நாதன் விளையாட்டு விழா ஆண்டறிக்கை வாசித்தார்.

வேலுார் மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குநர் மலர், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கினார்.

தமிழ்த்துறை உதவி பேராசிரியர் அகஸ்டின் ஜார்ஜ் செல்லம்மாள், கவுரவ விரிவுரையாளர் உமாயல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

ஆங்கில துறை தலைவர் ராஜேஸ்வரி ஜெயராணி நன்றி கூறினார்.

Advertisement