சபரிமலையில் சித்திரை விஷு பூஜை

சபரிமலை : சித்திரை விஷு நாளில் கனி தரிசனம் நடத்தி ஐயப்பனை வணங்க திரளான பக்தர்கள் சபரிமலையில் கூடினர்.
பங்குனி உத்திர திருவிழா மற்றும் சித்திரை விஷு பூஜைகளுக்காக சபரிமலை நடை ஏப்.1ல் திறக்கப்பட்டது. ஏப்.2 முதல் 11 வரை 10 நாட்கள் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. 11-ம் தேதி இரவு கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெற்றது. ஏப்.,12- முதல் சித்திரை விஷு பூஜைகள் நடக்கின்றன.
நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்ததும் விஷு கனி தரிசனம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கனி தரிசனம் நடத்தி ஐயப்பனை வணங்கினர்.
பின்னர் தந்திரி கண்டரரு ராஜீவரரு பக்தர்களுக்கு நாணயங்களை கை நீட்டமாக வழங்கினார்.
ஏப்., 18 வரை சித்திரை விஷு பூஜைகள் நடக்கும். அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கலவரம்: மம்தா குற்றச்சாட்டு
-
சொத்துவரி பெயர் மாற்ற ரூ.20 ஆயிரம் லஞ்சம்: பேரூராட்சி ஊழியர்கள் கைது
-
நேஷனல் ஹெரால்ட் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் பொறுப்பை ஏற்க வேண்டும்: அஷ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தல்
-
தென்காசி அருகே கொடூர சம்பவம் : மனைவி கண்முன்னே கணவனை வெட்டி தலையை துண்டித்த கும்பல்!
-
போரல் - கே.எல்.ராகுல் ஜோடி நிதான ஆட்டம்; மெல்ல மெல்ல ரன் குவிக்கும் டில்லி
-
உயர்கல்வித்துறை பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும்; முதல்வர் ஸ்டாலின்
Advertisement
Advertisement