என்னை 'ஓட்டுன' மாதிரி அமைச்சர் மூர்த்தியை 'ஓட்டுங்க': செல்லுார் ராஜூ 'லகலக'

மதுரை: 'ஏற்கனவே பூமிபூஜை போட்ட ரோட்டுக்கு மீண்டும் பூமிபூஜை போட்ட அமைச்சர் மூர்த்தி, மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வான என்னிடமும், மக்களிடம் மாட்டிக் கொண்டார்.
தெர்மோகோல் விஷயத்துக்காக என்னை 'ஓட்டுனதை' போல அமைச்சர் மூர்த்தியையும் நீங்கள் 'ஓட்டுங்க' என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கிண்டலாக கூறினார். மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: போட்ட ரோட்டுக்கு மறுபடியும் பூமிபூஜை போடுறார் அமைச்சர் மூர்த்தி. அவர்கிட்ட இந்த ரோடுக்கு ஏற்கனவே பூமிபூஜை போட்டாச்சுனு அதிகாரிகள் சொல்லிருந்தா போயிருப்பாரா; போயிருக்கமாட்டார். அவர்கிட்ட அதிகாரிகள் சொல்லல. கூட்டிட்டு போய் அமைச்சரை மாட்டி விட்டுட்டாங்க.
இப்ப மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வான என் கிட்டயும் மக்கள்கிட்டயும் அமைச்சர் மூர்த்தி மாட்டிகிட்டாரு. இதுமாதிரி அதிகாரிகள் சொல்லித் தான், நான் போய் தெர்மோகோல் போட்டது. அதிகாரி சொல்லித்தானே அமைச்சர்கள் போறாங்க. தெர்மோகோல் விஷயத்துல என்னை மட்டும் 'ஓட்டுனீங்க', இப்ப முடிஞ்சா அமைச்சர் மூர்த்தியையும் 'ஓட்டுங்க'. இவ்வாறு அவர் கூறினார்.










மேலும்
-
முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கலவரம்: மம்தா குற்றச்சாட்டு
-
சொத்துவரி பெயர் மாற்ற ரூ.20 ஆயிரம் லஞ்சம்: பேரூராட்சி ஊழியர்கள் கைது
-
நேஷனல் ஹெரால்ட் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் பொறுப்பை ஏற்க வேண்டும்: அஷ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தல்
-
தென்காசி அருகே கொடூர சம்பவம் : மனைவி கண்முன்னே கணவனை வெட்டி தலையை துண்டித்த கும்பல்!
-
போரல் - கே.எல்.ராகுல் ஜோடி நிதான ஆட்டம்; மெல்ல மெல்ல ரன் குவிக்கும் டில்லி
-
உயர்கல்வித்துறை பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும்; முதல்வர் ஸ்டாலின்