நின்ற லாரி மீது டூவீலர் மோதி இன்ஜினியர் பலி

தென்காசி: : தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த ராஜாமணி மகன் அருண்குமார் 25. இன்ஜினியர். புளியங்குடியில் கடையில் கணக்காளராக பணியாற்றி வந்தார்.

நேற்று அதிகாலை 2:00 மணியளவில் அருண்குமார் , வெளியூர்களில் இருந்து வந்திருந்த தமது இரு நண்பர்களுடன் மூன்று பேராக டூவீலரில் சென்றனர். அப்போது டூவீலர் நிலை தடுமாறி ரோட்டோரம் நின்ற லாரி மீது மோதியது.

இதில் மூவரும் படுகாயமுற்றனர். அருண்குமார் சிகிச்சைக்கு செல்லும் வழியில் பலியானார். மற்ற இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. புளியங்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement