கோப்பை வென்றார் அல்காரஸ்: மான்டி கார்லோ டென்னிசில்

மான்டி கார்லோ: மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஒற்றையரில் ஸ்பெயினின் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
மொனாகோவில், ஏ.டி.பி., மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், இத்தாலியின் லாரென்சோ முசெட்டி மோதினர். வலது காலில் ஏற்பட்ட காயத்துடன் விளையாடிய முசெட்டி, முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட அல்காரஸ், 2வது செட்டை 6-1 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் அசத்திய ஸ்பெயின் வீரர், 6-0 என வென்றார். முடிவில் அல்காரஸ் 3-6, 6-1, 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக கோப்பை வென்றார். தவிர இது, இவரது 6வது மாஸ்டர்ஸ் பட்டம் ஆனது. ஏற்கனவே மயாமி (2022), மாட்ரிட் (2022, 2023), இந்தியன் வெல்ஸ் (2023, 2024) மாஸ்டர்ஸ் தொடர்களில் கோப்பை வென்றுள்ளார். ஒட்டுமொத்தமாக 18வது பட்டம் வென்ற அல்காரஸ் 21, ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறுகிறார்.
மேலும்
-
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
நாளைய மின்தடை (27.04.2025) காஞ்சிபுரம்
-
ரூ.100க்கு குறைவாக யு.பி.ஐ.,சேவை இல்லையாம் காஞ்சிபுரத்தில் மீண்டும் சில்லரை பிரச்னை
-
மனையில் தேங்கும் கழிவுநீரால் வல்லத்தில் நோய் தொற்று பீதி
-
பங்கு சந்தை நிலவரம்
-
பாகிஸ்தானியர்களை உடனடியாக வெளியேற்றுங்கள்!: மாநில முதல்வர்களுக்கு அமித் ஷா உத்தரவு