கழிப்பறை பயன்பாட்டிற்கு வருமா வடிகால் வசதி அவசியம் * வடிகால் வசதி தேவை

வாடிப்பட்டி, : வாடிப்பட்டி ஒன்றியம் கச்சைகட்டி ஊராட்சி வடக்கு தெருவில் 2021ல் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வராத கழிப்பறையை பராமரித்து தர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இப்பகுதியினர் கோயில் விழாக்களின் போது அம்மன் கரகம் ஜோடிப்பது, பூஞ்சோலை அடைதல் போன்ற வழிபாடுகளை சிறுமலை ஓடை கிணறு பகுதியில் வைத்து செய்து வருகின்றனர். இப்பகுதியினர் எதிர்ப்பையும் மீறி கிணறு அருகே ரூ5.25 லட்சத்தில் சமுதாய சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இன்று வரை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.
விஜயலட்சுமி: இப்பகுதி வீடுகளில் கழிப்பறைகள் அதிகம் இல்லை. ஓடை காட்டுப்பகுதி என விஷப்பூச்சிகள் உள்ள திறந்தவெளியை தேடி செல்வோர் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை என்றார்.
பிரியா: முழுமையான வடிகால் வசதி இல்லாததால் மழை நேரங்களில் கழிவு நீர் வீட்டின் முன் ஒரு அடிக்கு தேங்கி நிற்கிறது. கழிப்பறை அருகே உள்ள அடிகுழாயை சுற்றி நிற்பதால் சுகாதாரம் பாதிக்கிறது என்றார்.
மேலும்
-
வேலுார் இப்ராஹிமுக்கு வீட்டுச்சிறை மதுரையில் போலீசார் நடவடிக்கை
-
பெண்கள் மீதான வன்முறை குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்
-
இன்றைய மின் தடை கள்ளக்குறிச்சி
-
'தினமலர்' நீட் மாதிரி நுழைவு தேர்வு கள்ளக்குறிச்சியில் 27ம் தேதி நடக்கிறது
-
24 மணி நேரமும் மதுபானம் விற்பனை பாட்டிலை அடித்து நொறுக்கிய பெண்கள்
-
தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு நாள் அனுசரிப்பு