தாயிடம் கோபம் வாலிபர் தற்கொலை

புதுச்சேரி: தாயிடம் கோபித்து கொண்டு போதையில் இருந்த வாலிபர், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி, குருமாம்பேட், அமைதி நகரை சேர்ந்தவர் பிரகாஷ், 27, இவரது தந்தை இறந்ததிலிருந்து, அதிகமாக மது குடித்து வந்தார். ஏற்கனவே எலி பேஸ்ட் சாப்பிட்டு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். நேற்று முன்தினம், மது குடித்துவிட்டு, தனது தாயிடம் சாப்பாடு ஊட்டி விடுமாறு கேட்டார். ஏன் குடிக்கிறாய் என கேட்டு விட்டு அவர் படுக்க சென்றார்.

இதனால் தாயிடம் கோபித்து கொண்ட, பிரகாஷ் அறையில், துாக்கிட்டுக்கொண்டார். சத்தம்கேட்டு வீட்டில் இருந்தவர்கள், அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனை செய்து, பிரகாஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின்பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement