கல்லுாரி ஆசிரியர்கள் நலச்சங்கம் அமைச்சரிடம் கோரிக்கை மனு

புதுச்சேரி : நிலுவையில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கல்லுாரி ஆசிரியர்கள் நலச்சங்க பொறுப்பாளர்கள் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து மனு அளித்தனர்.

புதுச்சேரி உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப இயக்குனரகக் கல்லுாரிகளில் பணிபுரியும் உதவிப் பேராசிரியர்கள் உள்ளடங்கிய ராதாகிருஷ்ணன் கல்லுாரி ஆசிரியர்கள் நலச் சங்கத் தலைவர் பிரசன்னா துணைத் தலைவர் கதிர்வேல், பொதுச்செயலாளர் காயத்ரிதேவி ஆகியோர் அமைச்சர் நமசிவாயத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், கடந்த 2009 மற்றும் 2014ம் ஆண்டுகளில் உதவிப் பேராசிரியர்களாகச் பணியில் சேர்ந்தவர்களுக்கு தொழில் முன்னேற்றத்திட்டத்தின் கீழ் பேராசிரியர்களாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும். வெளிப்படையான இடமாற்றக் கொள்கையை உருவாக்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டம் அமுல் படுத்தப்பட வேண்டும்.

பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளுக்கும், நிபந்தனைகளுக்கும் உட்பட்டு முதல்வர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement