குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

எரியோடு: எரியோடு உசிலம்பட்டி களத்து வீடுகளுக்கு அம்மாபட்டி நால் ரோடு பகுதி ஆழ்துளை கிணறு அமைத்து 10 ஆயிரம் லிட்டர் மேல்நிலைத் தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் நடந்தது. தனியே குடிநீர் தொட்டி இயக்குபவர் இல்லாமல் சில மாதங்களாக இதே பகுதியை சேர்ந்த ஒருவர் இலவச பணியாக செய்தார்.

இவர் இப்பணியை 20 நாட்களாக நிறுத்தியதால் குடிநீர் சப்ளை இல்லாமல் மக்கள் பரிதவித்தனர்.கோவிலுார் வேடசந்துார் ரோட்டில் காலி குடங்களுடன் மக்கள் மறியல் செய்தனர். எரியோடு இன்ஸ்பெக்டர் முருகன் நடவடிக்கை எடுப்பதாக கூற மறியல் முடிவுக்கு வந்தது.

Advertisement