தி.மு.க.,வினருக்கு இந்துக்கள் ஓட்டு போடக்கூடாது!: அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் கோவை மக்கள் கொந்தளிப்பு

கோவை: தி.மு.க., அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவம் குறித்து, மிகவும் அபாசமாக பேசியதை, தமிழகம் முழுவதும் பெண் அமைப்பினர், பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கோவை மக்கள், சமூக ஆர்வலர்கள், பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என, கோபாவேசமாக தெரிவித்தனர்.
'இந்துக்கள் ஓட்டு போடக்கூடாது'
அடிப்படை நாகரிகம் தெரியாத இவரை, இன்னும் அமைச்சராக வைத்து இருப்பதுதான் கொடுமையாக உள்ளது. ஆட்சி அதிகாரத்தில் இருந்தால், என்ன வேண்டும் என்றாலும் பேசலாம் என்று நினைத்துக் கொண்டு, தி.மு.க.,வினர் பேசி வருகின்றனர். இந்து மதத்தை அவமதிக்கும் தி.மு.க.,வினருக்கு, இந்துக்கள் யாரும் ஓட்டு போடக்கூடாது.
- பிரசாத், சுயதொழில்
'மன்னிப்பு பத்தாது'
பொன்முடி பேசியதை, அவர்களின் கட்சிக்காரர்களே ஏற்றுக்கொள்ள மாட்டாகள். பகுத்தறிவு பற்றி பேசும் இவர்கள், பகுத்தறிவே இல்லாமல் பேசி வருகின்றனர். பெண்களை இவ்வளவு மோசமாக பேசி விட்டு, மன்னிப்பு கேட்டால் சரியாகி விடுமா? மன்னிப்பு பத்தாது. அவர் அமைச்சர் பதவி விலக வேண்டும்.
- சங்கர் பெருமாள், சுயதொழில்
'அநாகரீக பேச்சு'
தி.மு.க., கட்சியில் இருப்பவர்கள், இந்துக்களின் மனதை புண்படுத்துவதில் குறியாக உள்ளனர். அமைச்சராக இருப்பவர், இவ்வளவு மோசமாக பேசி இருக்கிறார். இவர் மட்டுமல்ல, தி.மு.க.,வில் இன்னும் பலபேர் இப்படி அநாகரிகமாக பேசுபவர்களாக உள்ளனர். பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
- கிருஷ்ணா, குடும்ப தலைவி
'தேர்தலில் சாட்டை அடி'
தி.மு.க.,வினர், இந்து மத எதிர்ப்பு, பிராமணர் எதிர்ப்பு என்ற இந்த இரண்டை மட்டுமே வைத்துக்கொண்டு, அரசியல் நடத்துகின்றனர். பெரும்பான்மை இந்து மக்களின் ஓட்டுகளை வாங்கி, ஆட்சியில் அமர்ந்து கொண்டு, இந்துக்களை கொச்சைப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த தேர்தலில், மக்கள் தி.மு.க.,வுக்கு சட்டை அடி கொடுப்பார்கள்.
- சரவணகுமார், சுயதொழில்
'கொச்சைப்படுத்தி விட்டார்'
திராவிட கட்சியினர் இந்து மதத்தை, விமர்சனம் செய்வதை தொழிலாக வைத்துள்ளனர். இவர்கள் சொல்லும் சிறுபான்மை மதங்களை, இப்படி பேசி இருந்தால் அவர்கள் சும்மா விட்டுவிடுவார்களா? இவர்களுக்கு ஓட்டு போட்டு, ஆட்சியில் அமர வைத்த பெரும்பான்மை இந்து மக்களை, இவ்வளவு கேவலமாக பேசி, அவர்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தி இருக்கிறார் பொன்முடி. இவரை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்க வேண்டும்.
- ராஜ்மோகன், தொழில் முனைவோர்
'வக்கிர புத்தியின் உச்சம்'
திராவிட கட்சியை சேர்ந்தவர்கள், நாகரிகமற்றவர்கள் என்பதை, பொன்முடியின் இந்த பேச்சு மூலம் நிரூபித்துள்ளார். இதை வக்கிர புத்தியின் உச்சம் என்றுதான் சொல்லவேண்டும். தி.மு.க.,வின் அமைச்சரே இப்படி என்றால், மற்றவர்கள் எப்படி இருப்பார்கள். அவரை கட்சி பதவியில் இருந்து நீக்கி விட்டால், தி.மு.க., புனிதமாகி விடாது. இதோடு இவர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும்.
- லாவண்யா குரு, குடும்பத்தலைவி
'இந்துக்களை அவமதித்து விட்டார்'
ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் அமைச்சர், கொஞ்சம் கூட யோசிக்காமல் இப்படி பேசி இருப்பது, மிகவும் வருத்தமாக உள்ளது. சைவர்கள் திருநீர் இடுவதும், வைணவர்கள் திருநாமம் இடுவதும், அவர்கள் நம்பிக்கையின் குறியீடு. அதை அவமதித்து பேசுவது, கண்டனத்துக்கு உரிய செயல். இப்படி மோசமாக பேசுவதை யாரும் ஏற்க மாட்டார்கள்.
- புருசோத்தமன், சமூக ஆர்வலர்
'தி.மு.க.,வுக்கு அவமானம்'
தி.மு.க.,வினர் பெண் விடுதலை பற்றி பேசுகின்றனர். அந்த கட்சியில் அமைச்சராக இருந்து கொண்டு, இப்படி பெண்களை அவமதிக்கும் வகையிலும், மற்றவர்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையிலும் பேசி இருக்கிறார் பொன்முடி. இவர் இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்பும் இப்படி பேசி இருக்கிறார். பொன்முடி அமைச்சராக தொடர்வது, தி.மு.க.,வுக்கு அவமானம்.
- கலை அஸ்வினி, சமூக ஆர்வலர்
'அரசியல் நாகரீகம் இல்லை'
தி.மு.க.,வினர் தொடர்ந்து இந்துக்களை புண்படுத்தும் வகையில் பேசி வருகின்றனர். இது அரசியல் நாகரிகம் இல்லை. மற்ற மதத்தினரை இப்படி பேசினால், சும்மா விட்டு விடுவார்களா ? கட்சி பதவியில் இருந்து நீக்கி விட்டால் இது சரியாகி விடாது. அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும்.
- ஜெயதிலகா, சமூக ஆர்வலர்
'மலிவான பேச்சு'
ஒரு மாநிலத்தின் அமைச்சராக இருப்பவர், இவ்வளவு மலிவாக பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்து. இவருக்கு ஓட்டு போட்டவர்கள் சைவர்களும், வைணவர்களும் இருக்கின்றனர். இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு, தி.மு.க.,வினர் இந்து மக்களிடம் ஓட்டு கேட்பார்கள் என தெரியவில்லை.
- சுந்தரராமன், சுயதொழில்






மேலும்
-
ரூ.6.80 கோடி போதை பொருள் பறிமுதல் வெளிநாட்டு நபர் உட்பட 9 பேர் கைது
-
கஞ்சா வியாபாரி காலில் சுட்டுப்பிடிப்பு
-
வேலுார் இப்ராஹிமுக்கு வீட்டுச்சிறை மதுரையில் போலீசார் நடவடிக்கை
-
10ம் தேர்வு எழுதிவிட்டு மாயமான மாணவிகள் 5 பேர்: திருச்சியில் மீட்ட போலீஸ்
-
பெண்கள் மீதான வன்முறை குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்
-
இன்றைய மின் தடை கள்ளக்குறிச்சி