உழவர்கரை மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்பு துவக்கம்

புதுச்சேரி: உழவர்கரை தொகுதியில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்பை,. பா.ஜ., மாநில செயலாளர் சரவணன் துவக்கி வைத்து மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்களை வழங்கினார்.
புதுச்சேரி மாநில பா.ஜ., செயலாளரும், உழவர்கரை தொகுதி பிரமுகருமான சரவணன், உழவர்கரை தொகுதியை சேர்ந்த பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் நீட் பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.
அதன்படி, மதர் குளோரி நீட் அகாடமி மூலம் துவங்கப்பட்ட நீட் பயிற்சி வகுப்புகளை உழவர்கரை தொகுதி பா.ஜ., பிரமுகர் சரவணன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். தொடர்ந்து, பயிற்சி பெறும் மாணவர்களுக்கு நீட் பயிற்சி புத்தகங்களை இலவசமாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
'தொகுதியை சேர்ந்த வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள, நடுத்தர மாணவ மாணவிகள் பயனடையும் வகையில் நீட் பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது' என சரவணன் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பா.ஜ., நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
சென்னையில் கொட்டியது கனமழை; சூறைக்காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் சிரமம்!
-
மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் தற்கொலைக்கு முயற்சி: சேலம் பஸ்ஸ்டாண்டில் அதிர்ச்சி!
-
ராமதாஸ் வழிகாட்டுதலில் சித்திரை நிலவு மாநாடு; அன்புமணி பேட்டி
-
ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
-
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா; இ.பி.எஸ்., 'பளீச்' பதில்!
-
4 மாதங்களில் 85,000 இந்தியர்களுக்கு விசா வழங்கியது சீனா!