தாய் மாயம் மகன் புகார்
பாகூர்: மனைவியை பிரிந்து வசித்து வரும் மகனின் வாழ்க்கை நினைத்து மன வேதனையில் இருந்து வந்த தாய் காணாமல் போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர் அடுத்துள்ள கடுவனுாரை சேர்ந்தவர் நாகராஜன் 64; பார்வை திறன் இழந்தவர். இவருக்கு, புஷ்பா 53; என்ற மனைவியும், ஜானகிராமன், ராம்குமார் என்ற மகன்களும் உள்ளனர். ராம்குமார் சென்னையில் வேலை செய்து வருகிறார். ஜானகிராமனுக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு குழந்தை உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, கணவன் -மனைவி இருவரும் பிரிந்து தனித்தனியே வசித்து வருகின்றனர்.
இதை நினைத்து, புஷ்பா மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 12ம் தேதி காலை புஷ்பா, தனது கணவர் மற்றும் மகனிடம் இது பற்றி வருதத்துடன் பேசியுள்ளார். அவர்கள் இருவரும், அவரை சமாதானம் செய்து வைத்தனர்.
பின்னர், வீட்டில் இருந்து வெளியே சென்ற புஷ்பா மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்
-
சென்னையில் கொட்டியது கனமழை; சூறைக்காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் சிரமம்!
-
மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் தற்கொலைக்கு முயற்சி: சேலம் பஸ்ஸ்டாண்டில் அதிர்ச்சி!
-
ராமதாஸ் வழிகாட்டுதலில் சித்திரை நிலவு மாநாடு; அன்புமணி பேட்டி
-
ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
-
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா; இ.பி.எஸ்., 'பளீச்' பதில்!
-
4 மாதங்களில் 85,000 இந்தியர்களுக்கு விசா வழங்கியது சீனா!