அம்பேத்கர் சிலைக்கு கவர்னர், முதல்வர் மாலை அணிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி பாரதி பூங்கா அருகேயுள்ள அவரது உருவ சிலைக்கு கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, கடற்கரை சாலையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கும் மாலை அணிவித்து மலர்துாவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில், சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், சாய் சரவணன் குமார், எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், பாஸ்கர், லட்சுமிகாந்தன், பிரகாஷ்குமார், அரசு செயலர் முத்தம்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காங்., கட்சி சார்பில் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., தலைமையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன், கார்த்திகேயன், மாநில செயலாளர்கள் தனுசு, இளையராஜா, செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க., சார்பில் மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், அவை தலைவர் சிவக்குமார், துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, பொருளாளர் செந்தில்குமார், மாநில இளைஞரணி அமைப்பாளர் சம்பத், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சரவணன், அருட்செல்வி, பொதுகுழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க., சார்பில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நிர்வாகிகள், ராஜ்பவன் தொகுதி விக்னேஷ் கண்ணன், இ.கம்யூ., சார்பில் மாநில செயலாளர் சலீம், நாரா கலைநாதன், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், மா.கம்யூ., மாநில செயலாளர் ராமச்சந்திரன், ராஜாங்கம் உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் பல்வேறு அமைப்பினர், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும்
-
சென்னையில் கொட்டியது கனமழை; சூறைக்காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் சிரமம்!
-
மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் தற்கொலைக்கு முயற்சி: சேலம் பஸ்ஸ்டாண்டில் அதிர்ச்சி!
-
ராமதாஸ் வழிகாட்டுதலில் சித்திரை நிலவு மாநாடு; அன்புமணி பேட்டி
-
ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
-
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா; இ.பி.எஸ்., 'பளீச்' பதில்!
-
4 மாதங்களில் 85,000 இந்தியர்களுக்கு விசா வழங்கியது சீனா!