ஒக்கலிகர் எம்.எல்.ஏ.,க்கள் இன்று ஆலோசனை கூட்டம்

பெங்களூரு: ''ஜாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பாக, ஒக்கலிகர் சமுதாய எம்.எல்.ஏ.,க்களுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்,'' என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கையை இன்னும் முழுதாக படிக்கவில்லை. எங்களின் ஒக்கலிகர் சமுதாய எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், குமாரபார்க் காந்தி பவன் சாலையில் உள்ள துணை முதல்வரின் அலுவலக இல்லத்தில், நாளை (இன்று) நடக்கிறது. யாருடைய மனதையும் புண்படுத்தாமல் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய எஸ்.சி., - எஸ்.டி., சமுதாயத்தினரை முன்னேற்றுவதற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்.

அனைத்து சமுதாய மக்களுக்கும் காங்கிரஸ் நீதி கிடைக்க செய்யும். யாருடைய இடஒதுக்கீட்டையும் நாங்கள் அபகரிக்கவில்லை.

இவ்வாறு கூறினார்.

Advertisement