சட்டசபை அவமதிப்பு ராஜண்ணா மீது புகார்

பெங்களூரு: சட்டசபை கூட்டத்தில், ஹனிடிராப் குறித்து பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் ராஜண்ணா மீது, ஜெ.சி.நகர் போலீஸ் நிலையத்தில், சமூக ஆர்வலர் பீமப்பா கடாத், நேற்று புகார் செய்து உள்ளார்.

இது தொடர்பாக, அவர் நேற்று அளித்த பேட்டி:

அமைச்சராக பதவி பிரமாணம் செய்த போது, ரகசியத்தை காப்பாற்றுவேன் என, ராஜண்ணா உறுதி அளித்திருந்தார். ஆனால் சட்டசபையில் அவர் ஹனிடிராப் குறித்து பேசி, அரசியல் சாசனத்துக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளார். எனவே அரசியல் சாசனம் வகுத்த அம்பேத்கரின் ஜெயந்தி தினத்தன்றே, ராஜண்ணா மீது புகார் அளித்தேன்.

ஹனிடிராப் குறித்து பேசிய ராஜண்ணா, தன்னிடம் 'சிடி' உள்ளதாக கூறியுள்ளார். எனவே போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும். ஏற்கனவே உள்துறை அமைச்சரிடம் புகார் செய்துள்ளேன். இன்று (நேற்று) போலீஸ் நிலையத்தில், புகார் அளித்துள்ளேன். போலீசார் உடனடியாக ராஜண்ணாவை கைது செய்து விசாரணை நடத்தாவிட்டால், அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement