தங்கவயலில் அம்பேத்கர் விழா

தங்கவயல்: தங்கவயலில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது.

கோலார் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டசபைத் தொகுதிகளில் மூன்று தனி தொகுதிகள். அதில் ஒன்று தங்கவயல். இங்குள்ள நகர பகுதியில் 35 வார்டுகள், கிராம பகுதிகளில் 16 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. 4 லட்சம் பேர் வாழும் தங்கவயல் தொகுதியில் நேற்று அம்பேத்கர் ஜெயந்தி அனைத்து இடங்களிலும் கொண்டாடப்பட்டது.

தங்கவயல் தொகுதியில் 16 இடங்களில் அம்பேத்கர் சிலைகள் உள்ளன. அனைத்து சிலைகளுக்கும் சிலை நிறுவிய அமைப்பு குழுவினர், அனைத்துக் கட்சியினர், பொதுநல அமைப்பினர் மாலைகள் அணிவித்து இனிப்புகள், மோர், குடிநீர், மதிய உணவு வழங்கினர்.

தங்கவயல் தாலுகாவின் 15 துறைகள் சார்பிலும் தேர் திருவிழா நடந்தது. தாலுகா அலுவலகத்தில் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா, தாசில்தார் நாகவேணி, நகராட்சி ஆணையர் பவன் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement