துப்பாக்கி சுடுவதற்கான பயிற்சி சென்னையில் 28ல் தேர்வு போட்டி

சென்னை, ஏப். 17--

எஸ்.டி.ஏ.டி., ஸ்டார் அகாடமி பயிற்சி மையத்தில், துப்பாக்கி சுடும் பயிற்சிக்கான வீரர்கள் தேர்வு போட்டி, இம்மாதம் 28ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து, சென்னை மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

எஸ்.டி.ஏ.டி., எனும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், 38 மாவட்டங்களில், ஸ்டார் அகாடமி பயிற்சி மையம் அமைப்பட உள்ளது.

அதன்படி, சென்னை மாவட்டத்தில், துப்பாக்கி சுடுதல் விளையாட்டிற்கு, நேரு விளையாட்டு அரங்கில், பயிற்சி மையம் அமைக்கப்படுகிறது.

இம்மையத்தில் 12 - 21 வயது வரையிலான, தலா 20 மாணவ - மாணவியர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு, சீருடை, உபகணரங்கள் வழங்கப்படும்.

இதற்கான தேர்வு போட்டி, நேரு விளையாட்டு அரங்கில், இம்மாதம் 28ம் காலை, 8:00 மணிக்கு நடக்கிறது. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தோர் மட்டுமே பங்கேற்க முடியும்.

தேர்வு செய்யப்படுவோருக்கு மே 1 முதல் பயிற்சி அளிக்கப்பட்டு, மாநில மற்றும் தேசிய வீரர்களாக உருவாக்கப்பட உள்ளனர்.

அதேபோல், பயிற்சியாளர் பணிக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள், நேற்று முதல், 22ம் தேதி வரை, நேரு பூங்காவில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் பெற்று, இம்மாதம் 23ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு போட்டி மற்றும் பயிற்சியாளர் பணி தொடர்பான விபரங்களுக்கு, 74017 03480 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement