4 மாத குழந்தை உயிரிழப்பு

கொளத்துார், கொளத்துார், சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி பிரியங்கா. தம்பதிக்கு நான்கு மாத ஆண் குழந்தை உள்ளது. நேற்று அதிகாலை 4:00 மணியளவில், குழந்தைக்கு தாய்பால் கொடுத்த பிரியங்கா, குழந்தையை துாங்க வைத்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து, குழந்தைக்கு பால் கொடுக்க சென்றபோது, குழந்தை சுயநினைவின்றி இருந்துள்ளது. உடனே பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனையில், குழந்தை இறந்தது தெரியவந்தது. இது குறித்து ராஜமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement