வாலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்றவர் கைது

மதுரவாயல், மதுரவாயல் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில், உடல் வலி நிவாரண மாத்திரைகளை, போதைக்காக விற்பனை செய்து வருவதாக, மதுரவாயல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தொடர் கண்காணிப்பில், உடல் வலி நிவாரண மாத்திரைகளை, போதை மாத்திரையாக விற்பனை செய்து வந்த, நெற்குன்றத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், 23 என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து, 76 வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் ஏழு ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர், வெளி மாநிலங்களில் இருந்து குறைந்த விலைக்கு வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வந்து, கல்லுாரி மாணவர்களை குறிவைத்து, போதை மாத்திரைகளாக விற்பனை செய்தது தெரியவந்தது.

Advertisement