ரோகித் சர்மாவுக்கு கவுரவம்

மும்பை: மும்பை கிரிக்கெட் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதன் முடிவில் வான்கடே மைதானத்தில் உள்ள மூன்று ஸ்டாண்டுகளுக்கு, இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முன்னாள் தலைவர் சரத்பவார், முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் பெயர் சூட்டுவது என முடிவு செய்யப்பட்டது.
இந்திய அணிக்காக 1966-74ல் 37 டெஸ்ட், 2 ஒருநாள் போட்டியில் பங்கேற்றவர் வடேகர். 1971ல் இவரது தலைமையிலான இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்தின் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. கடந்த 2018ல் தனது 77 வயதில் இவர் காலமானார்.
தவிர கபில் தேவ் (1983ல் ஒருநாள்), தோனி (2007ல் 'டி-20', 2011ல் 50 ஓவர், 2013ல் சாம்பியன்ஸ் டிராபி) வரிசையில் இந்தியாவுக்கு 'டி-20' (2024), சாம்பியன்ஸ் டிராபி (2025) வென்று தந்த கேப்டன் ரோகித் சர்மா. இவர்களை கவுரவிக்கும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement