சென்னை, புதுச்சேரி 4 ரயில்களின் சேவையில் மாற்றம்

சென்னை,
ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, நான்கு ரயில்களின் சேவையில், இன்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, சென்னை கோட்ட ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

★ தாம்பரம் - விழுப்புரம், காலை 9:45 மணி ரயில், விக்கிரவாண்டி வரை மட்டுமே செல்லும்

★ விழுப்புரம் - சென்னை கடற்கரை, மதியம் 1:40 மணி ரயில், விக்கிரவாண்டியில் இருந்து இயக்கப்படும்

★ எழும்பூர் - புதுச்சேரி, காலை 6:35 மணி ரயில், விழுப்புரம் வரை மட்டுமே செல்லும்

★ புதுச்சேரி - திருப்பதி, மாலை 3:00 மணி ரயில், முண்டியம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

***

Advertisement