பெசன்ட் நகர் மேம்பாடு ரூ.1.20 கோடி ஒதுக்கீடு

பெசன்ட்நகர் அடையாறு மண்டலம், 174வது வார்டு, பெசன்ட் நகர் நான்காவது பிரதான சாலை மற்றும் 24வது குறுக்கு தெருவில், சாலையோர பூங்காக்கள் உள்ளன.

இதை மேம்படுத்த, 47 லட்சம் ரூபாயை மாநகராட்சி ஒதுக்கியுள்ளது. அதே போல், பெசன்ட் நகர், ஒன்றாவது பிரதான சாலை நடைபாதையை மேம்படுத்த, 25 லட்சம் ரூபாய், ஸ்டீல் கைப்பிடி அமைக்க, 23 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

அதேபோல், 32வது குறுக்கு தெருவில் உள்ள பல்நோக்கு மைய கட்டடத்தை மேம்படுத்த, 25 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள், விரைவில் துவங்கும் என, மண்டல அதிகாரிகள் கூறினர்.

Advertisement