நெற்பயிரில் சோளிப்பிள்ளை பூச்சியைதடுக்க வேளாண் மாணவியர் விளக்கம்
நெற்பயிரில் சோளிப்பிள்ளை பூச்சியைதடுக்க வேளாண் மாணவியர் விளக்கம்
கிருஷ்ணகிரி:ஓசூர், அதியமான் வேளாண் கல்லுாரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவியர், கிருஷ்ணகிரி மாவட்டம், பையூரில் நெற்பயிரில் சோளிப்பிள்ளை பூச்சிகளை தடுக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு
எடுத்துரைத்தனர். அப்போது விவசாயிகளிடம் மாணவியர் கூறியதாவது: நெற்பயிரில் தோன்றும் சோளிப்பிள்ளை பூச்சிகள், இலையில் சிறிய வெட்டுகளை ஏற்படுத்துகின்றன. இது இலைகளின் விரிவை குறைப்பதோடு, அதன் வளர்ச்சியை பாதிக்கிறது. பாதித்த இலைகள், மஞ்சள் அல்லது பழுப்பு நிறமாக மாறும். இவை பலவிதமாக சிதறி காணப்படும். பூச்சிகளின் தாக்கத்தால், நெற்பயிர் வளர்ச்சி வெகுவாக குறைகின்றன. சோளிப்பிள்ளை பூச்சிகளை தடுக்க, நெல் அறுவடைக்கு பிறகு, மீதமுள்ள வைக்கோலை எடுத்து, அதை கயிறு போல் திரித்து, மண்ணெண்ணெயில் நனைத்து இருமுனைகளையும் பிடித்துக் கொண்டு நெற்பயிரில் படுமாறு அடித்துச் செல்ல வேண்டும். இதனால் சோளிப்பிள்ளை பூச்சிகள் இயற்கை முறையில், மிக சுலபமாக அழிக்கலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.