ஏப்.18 ல் மாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு

திண்டுக்கல் : ''மாவட்ட அணிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்குபெற திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கான தேர்வு ஏப்.18 ம் தேதி நடக்க உள்ளதாக'' மாவட்ட கிரிக்கெட் சங்க இணைச்செயலர் மகேந்திரகுமார் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது : தமிழக கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 14,16,19 வயதுக்குட்பட்ட இருபாலர் கிரிக்கெட் அணிக்கான தேர்வு ஏப். 18 ம் தேதி நடக்கிறது. சீலப்பாடி பிரஸித்தி வித்யோதயா பள்ளியில் நடைபெறும் இத்தேர்வில்பங்கேற்போர் ஆதார், பிறப்புசான்றிதழ், விளையாட்டு உபகரணங்கள், வெள்ளை சீருடை அணிந்து வர வேண்டும். காலை 8:00 மணிக்கு 14 வயது, 10:00 மணிக்கு 16 வயது , மதியம் 12:00 மணிக்கு 19 வயது, மாலை 4:00 மணிக்கு பெண்களுக்கும் தேர்வு நடக்கிறது. மேலும் விவரம் பெற மாவட்ட கிரிக்கெட் சங்க மேலாளரை 96556 63945 ல் அணுகலாம் என்றார்.

Advertisement