புளியம்பட்டி ஏரியில் கொட்டியஇறந்த கோழிகளால் துர்நாற்றம்



புளியம்பட்டி ஏரியில் கொட்டியஇறந்த கோழிகளால் துர்நாற்றம்


போச்சம்பள்ளி:போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டியிலுள்ள திப்பனுார் ஏரிக்கு, பாரூர் பெரிய ஏரியின் உபரிநீர் வருகிறது. அதிலிருந்து பெனுகொண்டாபுரம் ஏரிக்கு தண்ணீர் செல்லும். இந்த திப்பனுார் ஏரியில் வளர்க்கப்பட்டு, விற்பனை செய்யப்படும் மீன்களுக்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், போட்டி போட்டு வாங்கி செல்வர். வெயிலின் தாக்கம், போதிய மழை இல்லாததால், திப்பனுார் ஏரியில் தண்ணீர் குறைவாக உள்ளது.
இந்நிலையில், அந்த ஏரியில் சிலர் இறந்த கோழிகள் மற்றும் கோழிக்கழிவுகளை கொட்டி சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசி வருகிறது. நோய் தொற்று ஏற்படும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement