கரூர் பா.ஜ., அலுவலகத்தில்அம்பேத்கர் பிறந்த நாள் விழா
கரூர் பா.ஜ., அலுவலகத்தில்அம்பேத்கர் பிறந்த நாள் விழா
கரூர்:கரூர் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில், அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அவரது சாதனைகள் குறித்து, பா.ஜ., நிர்வாகிகள் பேசினர்.
நிகழ்ச்சியில், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஆறுமுகம், சக்திவேல் முருகன், மாவட்ட பொருளாளர் குணசேகரன், மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement