'மணல் குவாரிகளை 15 நாட்களில்திறக்காவிட்டால் வழக்கு தொடர்வோம்'
'மணல் குவாரிகளை 15 நாட்களில்திறக்காவிட்டால் வழக்கு தொடர்வோம்'
சேலம்:சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர் சங்கத்தலைவர் செல்வராஜ் தலைமையில் நிர்வாகிகள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தொடர்ந்து, அதன் செயலர் கண்ணையன் கூறியதாவது:சேலம் மாவட்டம் ஓமலுார் - தாரமங்கலம் சாலை, பெரியாம்பட்டியில், எம்.சாண்ட் சேமிப்பு கிடங்கு வைத்து, ஒருவர், நேரடி விற்பனை செய்வதால் தாரமங்கலத்தை சேர்ந்த லாரி, மஸ்தா, டிராக்டர் உரிமையாளர்கள், அதை சார்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தட்டிக்கேட்டால் போலீசார் உதவியுடன் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அதனால் முறைகேடாக இயங்கும் கிடங்கை, உடனே அப்புறப்
படுத்த வேண்டும். தமிழகத்தில் ஒன்றரை ஆண்டாக, மணல் குவாரிகளை அரசு நிறுத்தி வைத்துள்ளதால், 2,000 ரூபாய்க்கு விற்ற எம்.சாண்ட், தற்போது, 6,000 ரூபாய்க்கு விற்றாலும் தரமின்றி உள்ளது. மேலும், 4,500 கல்
குவாரிகள் இருந்தாலும், 400 குவாரிகள் மட்டும் தரச்சான்று பெற்றுள்ளது. அதில், 100 குவாரிகளின் கெடு முடிந்தும், தொடர்ந்து இயங்குவதால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மணல் குவாரிகளை, 15 நாட்களில் திறக்காதபட்சத்தில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.துணைத்தலைவர் பழனிசாமி, துணை செயலர் செல்வம், பொருளாளர் சந்திரன் உள்பட பெரியாம்பட்டி மக்கள் உடனிருந்தனர்.
மேலும்
-
அரசு பள்ளிகளில் சேர்க்கை ஆண்டுதோறும்... குறைகிறது; 'சிங்கிள்' டிஜிட்டில் மாறும் மாணவர் எண்ணிக்கை
-
'டாஸ்மாக்' வழக்கில் முதல் தகவல் அறிக்கை விபரம் தாக்கல் செய்ய உத்தரவு
-
கடலுார், விருத்தாசலத்தில் வரும் 27ம் தேதி 'தினமலர்' -- 'நீட்' மாதிரி நுழைவு தேர்வு
-
காரைக்காலில் கிரேன் மோதி முதியவர் பலி
-
தேசிய திறனறி தேர்வில் சாதித்த மரியன்னை பள்ளி
-
கோடை விடுமுறைக்கு கூடுதல் பஸ் இயக்க பயணிகள் எதிர்பார்ப்பு