அனல் மின் நிலையங்களில் 1,020 மெகாவாட் உற்பத்தி



அனல் மின் நிலையங்களில் 1,020 மெகாவாட் உற்பத்தி

மேட்டூர்:சேலம் மாவட்டம் மேட்டூர், பழைய அனல் மின் நிலையத்தில் ஒரு அலகில், 210 வீதம், 4 அலகுகளில், 840 மெகாவாட்; புது அனல்மின் நிலையத்தில் ஒரே அலகில், 600 மெகாவாட் என, 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். வார விடுமுறை, நேற்று முன்தினம் தமிழ் புத்தாண்டு, மழை ஆகியவற்றால், ஆலைகள், விவசாய மின் தேவை குறைந்தது. அதற்கேற்ப தமிழக மின்தேவை சரிந்தது. இதனால், கடந்த, 13ல் மேட்டூர் அனல்மின் நிலையங்களில், 1,230 மெகாவாட் மின்சார உற்பத்தி தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டது.
விடுமுறை முடிந்ததால் நேற்று, தமிழக மின்தேவை அதிகரித்தது. அதற்கேற்ப மேட்டூர் புது அனல் மின் நிலையத்தில், நேற்று காலை, 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.
பழைய அனல் மின் நிலையத்தில், 1, 2வது அலகுகளில், 420 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டது. இதனால் மேட்டூர் அனல் மின் நிலைய உற்பத்தி, நேற்று, 1,020 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டது.

Advertisement