கூட்டாளி கொலை வழக்கில் வரிச்சியூர் செல்வம் கோர்ட்டில் ஆஜர்

விருதுநகர்:விருதுநகரில் கூட்டாளி கொலை வழக்கில் நேற்று ஜே.எம்.2 நீதிமன்றத்தில் வரிச்சியூர் செல்வம் ஆஜரானார்.
வரிச்சியூர் செல்வத்தின் நெருங்கிய கூட்டாளியான செந்தில்குமாரை காணவில்லை என கூறி அவரது மனைவி முருகலெட்சுமி 2021ல் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். போலீசார் விசாரணையில் இரட்டை கொலை வழக்கு ஒன்றில் செந்தில்குமாரால் 38, தானும் போலீசில் சிக்ககூடும் எனக்கருதி வரிச்சியூர் செல்வம் அவரை ஒரு கும்பல் மூலம் சென்னையில் சுட்டு கொன்று துண்டு துண்டாக வெட்டி தாமிரபரணி ஆற்றில் வீசியது தெரிந்தது.
இந்த வழக்கில் வரிச்சியூர் செல்வத்தை 2023 ஜூன் 21ல் போலீசார் கைது செய்து சாத்துார் ஜே.எம்.,2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.
வழக்கு விருதுநகர் ஜே.எம்.2 நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. வரிச்சியூர் செல்வம் ஆஜர் ஆகி வருகிறார்.
இவரை போலீசார் என்கவுன்டர் செய்ய உள்ளதாக தகவல்கள் பரவின. நேற்று நடந்த வழக்கு விசாரணையின்போது, விருதுநகர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் ரவுடி வரிச்சியூர் செல்வம் ஆஜரானார். விசாரணையை ஏப்.30க்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவர் ஐயப்பன் உத்தரவிட்டார்.
பின் வரிச்சியூர் செல்வம் கூறியதாவது: அனைத்து வழக்கு விசாரணைகளுக்கும் நீதிமன்றத்தில் நான் தவறாமல் ஆஜராகி வருகிறேன். என் மீது உள்ள வழக்குகள் அனைத்தையும் முடித்துவிட்டு நிம்மதியாக வாழ நான் ஆசைப்படுகிறேன். என்னை என்கவுன்டர் செய்ய போலீசார் உத்தரவிட்டதாக வெளியான தகவல் வதந்தி. நான் அன்றாட பணிகளை செய்து வருகிறேன் என்றார்.
மேலும்
-
கடலுார், விருத்தாசலத்தில் வரும் 27ம் தேதி 'தினமலர்' -- 'நீட்' மாதிரி நுழைவு தேர்வு
-
காரைக்காலில் கிரேன் மோதி முதியவர் பலி
-
தேசிய திறனறி தேர்வில் சாதித்த மரியன்னை பள்ளி
-
கோடை விடுமுறைக்கு கூடுதல் பஸ் இயக்க பயணிகள் எதிர்பார்ப்பு
-
அதிருப்தியாளர்களை உற்சாகப்படுத்த வாரிய தலைவர் பதவி: ஸ்டாலின் திட்டம்
-
மின்சார கட்டணம் உயர்வு? 29ல் கருத்துக் கேட்பு கூட்டம்