மேட்டூர் அணைநீர்வரத்து அதிகரிப்பு


மேட்டூர் அணைநீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர்:சேலம் மாவட்டம் மேட்டூர் சுற்றுப் பகுதியில் தமிழ் புத்தாண் டான நேற்று முன்தினம் இரவு, 26.2 மி.மீ., மழை பெய்தது. அதற்கேற்ப நேற்று முன்தினம் வினாடிக்கு, 424 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று, 1,223 கனஅடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து, 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்மட்டம், 107.52 அடி, நீர்இருப்பு, 74.93 டி.எம்.சி.,யாக இருந்தது.

Advertisement