மழை வேண்டி 'காமட்டா திருவிழா'மண் சிலையை கரைத்து வழிபாடு
மழை வேண்டி 'காமட்டா திருவிழா'மண் சிலையை கரைத்து வழிபாடு
ஆத்துார்:சேலம் மாவட்டம் ஆத்துார், தலைவாசல், வீரகனுார், காட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில், 'காமட்டா' திருவிழா நடந்து வருகிறது. இரு நாட்களுக்கு முன், கொத்தாம்பாடியில் நடந்த திருவிழாவில், ஏராளமான பெண்கள், மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்று வழிபட்டனர். தொடர்ந்து களி மண் சிலைகளை, சிறுமியர், மணமாகாத இளம் பெண்கள், தலையில் சுமந்து, ஊர்வலமாக எடுத்துச்சென்று வசிஷ்ட நதியில் கரைத்து, மழை மற்றும் திருமணத்தடை நீங்க வேண்டி வழிபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: 'காமட்டா' எனும், 'காமன் திருவிழா'வை ஒட்டி, கிராமத்தில் உள்ள கோவில் அருகே பச்சை பந்தல் அமைத்து, மேடை பகுதியில் களி மண்ணால் ஆண், பெண் உருவத்தில் வடிவமைத்த சிலைகள் வைக்கப்படும். கிராம மக்கள் வீடுகளில் மாவிளக்கு எடுத்து வந்து பூஜை செய்வர். அப்போது, 12 முதல், 15 வயக்குட்பட்ட, வயதுக்கு வராத சிறுமியர், களி மண்ணால் செய்துள்ள, காமட்டாப்பன் சிலைகளுக்கு பூஜை செய்வர்.
அப்போது இளம்பெண்கள், மணமான பெண்கள் சேர்ந்து, குடில் அமைத்த இடத்தில் கும்மி பாடல்களை பாடி நடனமாடுவர். இரண்டாம் நாளில் அச்சிலைகளை சிறுமியர் தலையில் சுமந்து, ஆறு, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைத்துவிடுவர். இப்படி பூஜை செய்தால் மழைப்பொழிவு, மணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
கடலுார், விருத்தாசலத்தில் வரும் 27ம் தேதி 'தினமலர்' -- 'நீட்' மாதிரி நுழைவு தேர்வு
-
காரைக்காலில் கிரேன் மோதி முதியவர் பலி
-
தேசிய திறனறி தேர்வில் சாதித்த மரியன்னை பள்ளி
-
கோடை விடுமுறைக்கு கூடுதல் பஸ் இயக்க பயணிகள் எதிர்பார்ப்பு
-
அதிருப்தியாளர்களை உற்சாகப்படுத்த வாரிய தலைவர் பதவி: ஸ்டாலின் திட்டம்
-
மின்சார கட்டணம் உயர்வு? 29ல் கருத்துக் கேட்பு கூட்டம்