காதலை கைவிட்ட பெண்ணுக்கு வெட்டு

தென்காசி:தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே கற்குடியை சேர்ந்தவர் திருமலை குமார் 28. இவர் தெற்குமேட்டைச் சேர்ந்த பெண்ணை காதலித்தார். சில தினங்களாக அந்தப் பெண், திருமலைகுமாருடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.


இது குறித்து கேட்டபோது காதலை தொடர விருப்பமில்லை என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற திருமலை குமார், பெண்ணை தேடிச் சென்று அரிவாளால் வெட்டினார். பலத்த காயங்களுடன் பெண் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் திருமலைகுமாரை கைது செய்தனர்.

Advertisement