பொன்முடியை பதவி நீக்க கோரி ஆர்ப்பாட்டம் * 293 பேர் கைது

1

திருநெல்வேலி:அமைச்சர் பொன்முடி ஹிந்துக்களின் புனித சின்னங்களான விபூதி மற்றும் திருநாமம் குறித்து அவமதிக்கும் வகையில் பேசியதை கண்டித்தும், அவரை பதவி நீக்க கோரியும் ஹிந்து முன்னணியினர் திருநெல்வேலி டவுன் வாகையடிமுனையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 68 பெண்கள் உட்பட 293 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஹிந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், பொதுச்செயலாளர் அரசு ராஜா, அமைப்பாளர் பொன்னையா, செயலாளர் குற்றாலநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அன்னையர் முன்னணி, வெள்ளாளர் முன்னேற்ற கழகம், சைவ வெள்ளாளர் சங்கம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Advertisement