மாணவர்கள் மோதல்: 3 பேர் காயம்

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் பத்தாம் வகுப்பு இறுதி தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 3 பேர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வாக சமூக அறிவியல் தேர்வு நடந்தது. ராமநாதபுரம் நகரிலுள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவர்கள் முன் பகை காரணமாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். மேலும் வெளி நபர்களை கூட்டி வந்தும் தகராறு செய்தனர். இதில் மூன்று மாணவர்கள் காயம் அடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் அளித்த புகாரில் பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

Advertisement