மதுரை, குமரி உட்பட 3 மாவட்டங்களில் கொலைகளை கட்டுப்படுத்திய போலீசார்; தென்மாவட்டங்களிலும் ஓரளவு குறைப்பு

மதுரை : மதுரை, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 3 மாதங்களில் கொலைகளின் எண்ணிக்கையை போலீசார் பாதிக்கு பாதியாக குறைத்துள்ளனர். மற்ற தென்மாவட்டங்களில் ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது. முழுமையாக கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தென்மண்டல ஐ.ஜி., பிரேம்ஆனந்த் சின்ஹா உத்தரவுபடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
தென்மாவட்டங்களில் ரவுடிகள் முன்விரோதம், ஜாதிய மோதல் போன்ற காரணங்களால் கொலைகள் தொடர்ச்சியாக நடந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ரவுடிகளை கைது செய்ததோடு, அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தனர். உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கியதோடு, எதிர்தரப்பினரிடமும் எழுதி வாங்கினர். கூட்டாளிகள் உட்பட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். ஜாமினில் வந்தாலும் அவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். அதேபோல் திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் ஜாதிய மோதல், கொலைகள் தொடர்ந்தன. இதற்கு தீர்வு காண விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை கைது போன்ற நடவடிக்கையால் ஜாதிய கொலைகளும் கட்டுப்படுத்தப்பட்டன.
கடந்தாண்டில் முதல் 3 மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டின் முதல் 3 மாதங்களில் மதுரை உட்பட 3 மாவட்டங்களில் கொலைகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் கடந்தாண்டு 18 கொலைகள் நடந்த நிலையில், இந்தாண்டு 11 நடந்துள்ளன. துாத்துக்குடி, கன்னியாகுமரியில் 18 ஆக இருந்தது இந்தாண்டு 10 ஆக குறைந்துள்ளது. அதேநேரம் விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி மாவட்டங்களில் சிறிது உயர்ந்துள்ளது. கொலைகள் பெரும்பாலும் குடும்ப பிரச்னை, போதை போன்ற காரணங்களால் நிகழ்ந்துள்ளன.
ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா கூறுகையில், ''சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதாலும், போலீசார் ரோந்து செல்லுதல், தொடர் கண்காணிப்பு, விசாரணை போன்ற காரணங்களாலும் கொலைகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முழுமையாக கட்டுப்படுத்த சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன'' என்றார்.

மேலும்
-
அனுமதியின்றி பேட்டி கொடுக்க கூடாது: நிர்வாகிகளுக்கு அதிமுக வேண்டுகோள்
-
வக்ப் திருத்தச் சட்டம்: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர்!
-
வழக்கை திசை திருப்ப முயற்சி: டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
-
முனாப் படேலுக்கு அபராதம்
-
தவெக கொடியில் யானை சின்னம்: பதிலளிக்க விஜய்க்கு உத்தரவு
-
நீரஜ் சோப்ரா முதலிடம்: ஈட்டி எறிதலில் கலக்கல்