மரம் முறிந்து வீடு சேதம்

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே சாலையின் அருகில் உள்ள புளியமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் வீடு சேதமானது.

நடுவீரப்பட்டு அடுத்த குயிலாப்பாளையத்தைச் சேர்ந்தவர் கஸ்துாரி. இவரது ஓட்டு வீட்டின் அருகில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான பழமையான புளியமரம் உள்ளது. மரத்தின் கிளை திடீரென முறிந்து வீடு மற்றும் அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட டாடா ஏஸ் வாகனத்தின் மீது விழுந்தது.

இதில், வீடு மற்றும் டாடா ஏஸ் வாகனம் சேதமானது. தகவலறிந்த பண்ருட்டி தீயணைப்பு போக்குவரத்து பிரிவு நிலைய அலுவலர் எழிலவன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஜே.சி.பி.,இயந்திரத்தின் உதவியுடன் மரத்தின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர்.

Advertisement