பழங்குடியினருக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த திட்டம்; அமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு

கடலுார் : பழங்குடியினர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தமிழக முதல்வரால் தொல்குடி திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது என அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சமத்துவ நாள் விழா கம்மியம்பேட்டை புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.
அமைச்சர் பன்னீர்செல்வம், 4,377 பயனாளிகளுக்கு ரூ.47.02 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் 2023- - 24ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நகர மற்றும் ஊரக பகுதிகளிலுள்ள ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
பழங்குடியினர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தமிழ்நாடு முதலமைச்சரால் தொல்குடி திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பழங்குடியினருக்காக வாழ்வாதார திட்டங்களான விவசாயம், விவசாயம் சாரா தொழில்கள், கால்நடை மேம்பாடு, மீன் வளர்ப்பு போன்ற தொழில்கள் செய்து மேம்பாடு அடையும் வகையில் அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து “தொல்குடி வேளாண்மை மேலாண்மை திட்டம் - ஐந்திணை” எனும் திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்விழாவின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட 15 துறைகளிலிருந்து 4377 பயனாளிகளுக்கு ரூ.47.02 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கூடுதல் கலெக்டர் சரண்யா, எஸ்.பி., ஜெயக்குமார், மாநகர மேயர் சுந்தரி ராஜா, மாநகர கமிஷனர் அனு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் லதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
அனுமதியின்றி பேட்டி கொடுக்க கூடாது: நிர்வாகிகளுக்கு அதிமுக வேண்டுகோள்
-
வக்ப் திருத்தச் சட்டம்: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர்!
-
வழக்கை திசை திருப்ப முயற்சி: டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
-
முனாப் படேலுக்கு அபராதம்
-
தவெக கொடியில் யானை சின்னம்: பதிலளிக்க விஜய்க்கு உத்தரவு
-
நீரஜ் சோப்ரா முதலிடம்: ஈட்டி எறிதலில் கலக்கல்