கூனிச்சம்பட்டில் இன்று தீமிதி உற்சவம்

திருக்கனுார், : கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி உற்சவத்தை முன்னிட்டு, தேர் வீதியுலா நேற்று நடந்தது.
திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் தீமிதி உற்சவம் கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.
இதில், கடந்த 13ம் தேதி திரவுபதியம்மன் சுவாமி திருக்கல்யாண உற்சவமும், நேற்று காலை தேர் வீதியுலாவும் நடந்தது.
இதில் திரளான பொது மக்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.
முக்கிய நிகழ்வாக இன்று (16ம் தேதி) காலை 10:00 மணிக்கு ஊரணி பொங்கல் நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவமும் நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
மேலும்
-
அனுமதியின்றி பேட்டி கொடுக்க கூடாது: நிர்வாகிகளுக்கு அதிமுக வேண்டுகோள்
-
வக்ப் திருத்தச் சட்டம்: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர்!
-
வழக்கை திசை திருப்ப முயற்சி: டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
-
முனாப் படேலுக்கு அபராதம்
-
தவெக கொடியில் யானை சின்னம்: பதிலளிக்க விஜய்க்கு உத்தரவு
-
நீரஜ் சோப்ரா முதலிடம்: ஈட்டி எறிதலில் கலக்கல்