மோசடி வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் கொலை மிரட்டல்: பெண் புகார் * விசாரிக்க எஸ்.பி., உத்தரவு

நாகர்கோவில்:அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.50 கோடி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏசு ராஜசேகரன் கொலை மிரட்டல் விடுப்பதாக பெண் கன்னியாகுமரி எஸ்.பி.,ஸ்டாலினிடம் புகார் செய்தார். இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டார் எஸ்.பி.,

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் ஏசு ராஜசேகரன். இவரும் இவரது மனைவி முனியம்மாளும் சேர்ந்து அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மார்த்தாண்டம் அருகே கொடுங்குளம் லலிதா 43, உட்பட பலரிடமிருந்து ரூ..149 கோடி பெற்றனர். ஆனால் யாருக்கும் அவர்கள் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. சிலருக்கு போலி நியமன பணி ஆணையையும் வழங்கினர். இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார்களின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஏசுராஜசேகரன், முனியம்மாள் கைது செய்யப்பட்டனர். தற்போது ஜாமீனில் இவர்கள் வெளியில் உள்ளனர்.

இந்நிலையில் தன் அலைபேசியில் ஏசுராஜசேகரன் உள்ளிட்ட சிலர் வழக்கை வாபஸ் பெறும்படியும், இல்லாவிட்டால் கொலை செய்து விடுவதாகவும், சிலர் நேரடியாக வந்து வழக்கை வாபஸ் பெறும்படி மிரட்டல் விடுப்பதாகவும் லலிதா எஸ்.பி., ஸ்டாலினிடம் புகார் மனு அளித்தார். இது தொடர்பாக விசாரிக்க எஸ்.பி., உத்தரவிட்டார்.

Advertisement