எஸ்.ஐ., மீது தாக்குதல் * 4 பேர் கைது
நாகர்கோவில்:நாகர்கோவில் அருகே திருமண மண்டபத்தில் ஏற்பட்ட மோதலை தடுக்கச் சென்ற போலீஸ் எஸ்.ஐ., கிறிஸ்துராஜ் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில் அருகே ஒழுகினசேரி பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் இரு கோஷ்டிகளாக பிரிந்து குடிபோதையில் தகராறில் ஈடுபட்டனர். இதை அறிந்த வடசேரி போலீஸ் எஸ்.ஐ., கிறிஸ்துராஜ் தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர்.
அங்கு கைகலப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரு தரப்பினரையும் சமாதானம் செய்து கலைந்து செல்லும்படி போலீசார் கூறினர். அப்போது சிலர் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டனர். மேலும் எஸ்.ஐ., கிறிஸ்துராஜை சிலர் கீழே தள்ளி விட்டு கல்லை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் உமா தலைமையிலான கூடுதல் போலீசார் சென்று தகராறில் ஈடுபட்டவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
எஸ்.ஐ.,யை தாக்கியதாக தாழக்குடி அஜித் 29, வைத்தியநாதபுரம் பிரபு 28, பறக்கை ஆறுமுகமுத்துப்பாண்டி 27, வைத்தியநாதபுரம் செல்வ சூர்யா பிரதிஷ் 25, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின் இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் தொடர்புடைய வைத்தியநாதபுரம் விக்னேஷ் 29, தெங்கம்புதூர் சந்தோஷ் 27, ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும்
-
புதிய போப்பை தேர்வு செய்ய வாக்களிக்கும் 4 இந்திய கார்டினல்கள்: முழு விவரம்
-
பணமோசடி வழக்கு; நடிகர் மகேஷ் பாபுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
-
நிதி நிறுத்தப்பட்ட விவகாரம்; டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்டு பல்கலை வழக்கு
-
ஜி.எஸ்.டி., மோசடியில் ஈடுபட்ட 25,000 போலி நிறுவனங்கள்; ரூ.61,545 கோடி முறைகேடு கண்டுபிடிப்பு
-
குழந்தை விற்பனை: வடலுாரில் பெண் கைது
-
தட்டு வண்டியில் மதுபாட்டில் கடத்தல் திண்டிவனத்தில் வாலிபர் கைது