சிறுமியிடம் சில்மிஷம் 3 பேர் கைது

திருத்தணி:திருத்தணி முருகன் மலைக்கோவிலில், திருத்தணியைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர், கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். நேற்று மாலை, தாய் வெளியே சென்றதால், 14 வயது சிறுமி கடையில் இருந்தார்.

அப்போது, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் பகுதியைச் சேர்ந்த புவனேஷ், 22, லோகேஷ், 19 மற்றும் வேலுாரைச் சேர்ந்த ஜீவன், 20, ஆகியோர், கடைக்கு சென்று பொருட்கள் வாங்குவது போல் நடித்து, சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் மூன்று பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement