10ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு மாயமான மாணவிகள் 5 பேர்: திருச்சியில் மீட்ட போலீஸ்

5

பவானி: பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு மாயமான பள்ளி மாணவிகள் 5 பேரை திருச்சியில் போலீசார் மீட்டனர்.



தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்றுடன் முடிந்தன. ஈரோட்டில் சித்தோட்டைச் சேர்ந்த ஒரு சிறுமி, பவானியை சேர்ந்த 4 மாணவிகள் தேர்வு முடிந்த பின்னர் வீடு திரும்பவில்லை.


மாணவிகளின் பெற்றோர் இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தனர். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் அவர்கள் கவலை அடைந்தனர்.


இந் நிலையில், மாணவிகள் எங்கு உள்ளனர் என்பதை கண்டறியும் பணியில் போலீசார் இறங்கினர். அவர்கள் வைத்திருந்த செல்போன்களின் சிக்னல்கள் மூலம் திருச்சியில் இருப்பதை அறிந்தனர்.


இதையடுத்து, திருச்சிக்கு சென்ற பவானி போலீசார், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இருந்த மாணவிகளை மீட்டனர்.

Advertisement