ரூ.6.80 கோடி போதை பொருள் பறிமுதல் வெளிநாட்டு நபர் உட்பட 9 பேர் கைது

பெங்களூரு : போதை பொருள் விற்ற வெளிநாட்டு நபர் உட்பட ஒன்பது பேரை, சி.சி.பி., போலீசார் கைது செய்தனர். 6.80 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீஸ் துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரின், எலக்ட்ரானிக் சிட்டி இரண்டாவது ஸ்டேஜில், டிமார்ட் பின் பகுதியில், கஞ்சா விற்பனை செய்வதாக, சி.சி.பி., போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன் தினம் இரவு சி.சி.பி., போலீசார், அங்கு சென்று சோதனை நடத்தினர். கேரளாவை சேர்ந்த நபர் விற்க முயற்சித்த ஒரு கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதன்பின் அவரது வீட்டில் சென்று சோதனை நடத்திய போது, 2.554 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பிடிபட்டது. இவற்றின் மதிப்பு 4.52 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும். 26 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒரு மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது.
சிவில் இன்ஜினியரான இவர், பெங்களூரின் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். பொம்மசந்திராவின் அடுக்குமாடி குடியிருப்பில், வாடகை வீட்டில் வசிக்கிறார்.
கேரளாவில் இருந்து குறைந்த விலைக்கு, ஹைட்ரோபோனிக் கஞ்சா வாங்கி வந்து, பெங்களூரில் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஐ.டி., நிறுவனங்கள் அதிகம் உள்ள பொம்மசந்திராவில் விற்றுள்ளார்.
யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல், 'டபுள் லேயர் ஏர் டைட் பிளாஸ்டிக் கவர்'களில் 100 கிராம் வீதம், சிறு சிறு பிளாஸ்டிக் பாக்கெட்டுகளாக்குவார். இவற்றை பையில் வைத்து கொண்டு, மென் பொறியாளர் போன்று போதைப்பொருள் விற்றது, விசாரணையில் தெரிந்தது.
பேகூரில் வெளிநாட்டு நர் ஒருவர், போதைப்பொருள் விற்பதாக தகவல் கிடைத்தது. சி.சி.பி., போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ எம்.டி.எம்.ஏ., கிறிஸ்டல் போதைப்பொருள், ஒரு மொபைல் போன், ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. வெளிநாட்டு நபர் கைது செய்யப்பட்டார்.
இவரிடம் பாஸ்போர்ட் இல்லாதது தெரிந்தது. இவர் 2012ல் தொழில் விசாவில் இந்தியாவுக்கு வந்தார்.
ஆடம்பரமாக வாழ அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கில், பெங்களூரில் தங்கி கல்லுாரி மாணவர்கள், ஐ.டி., நிறுவன ஊழியர்களுக்கு போதைப்பொருள் விற்று வந்தார். இவர் போலி ஆவணங்கள் வைத்து கொண்டு வசிப்பது, முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது.
எலஹங்காவின், அட்டூர் லே - அவுட்டில் உள்ள லாட்ஜ் ஒன்றில், போதைப்பொருள் விற்ற கேரளாவின் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
மகளுக்கு வரதட்சணை கொடுமை; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் போலீசில் கண்ணீர் புகார்!
-
சவுக்கு சங்கர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை
-
உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
சென்னையில் கொட்டியது கனமழை; சூறைக்காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் சிரமம்!
-
மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் தற்கொலைக்கு முயற்சி: சேலம் பஸ்ஸ்டாண்டில் அதிர்ச்சி!
-
ராமதாஸ் வழிகாட்டுதலில் சித்திரை நிலவு மாநாடு; அன்புமணி பேட்டி