சித்திரை திருவிழா பாதுகாப்பு கோர்ட் தள்ளுபடி

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவிற்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்ய தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனுவை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது.

மனுதாரர் கடந்த ஆண்டு இதுபோல் மனு செய்தார். வழிகாட்டுதல்களை நீதிமன்றம் பிறப்பித்தது,' என அரசு தரப்பு தெரிவித்தது.

நீதிபதிகள், திருவிழா பாதுகாப்பில் காவல்துறை முழு கவனம் செலுத்துகிறது. இம்மனு விளம்பரம் தேடும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது,' என கருத்து தெரிவித்தது.இதையடுத்து மனுவை வாபஸ் பெற அனுமதிக்க மனுதாரர் தரப்பு கேட்ட போது அனுமதித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.

Advertisement