24 மணி நேரமும் மதுபானம் விற்பனை பாட்டிலை அடித்து நொறுக்கிய பெண்கள்

வத்தலக்குண்டு : கோம்பைபட்டியில் 24 மணி நேரமும் மது விற்பனை ஜோராக நடக்க ஆத்திரமடைந்த பெண்கள் மது பாட்டில்களை அடித்து நொறுக்கினர்.

கோம்பைபட்டியில் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மதுபானம் விற்கப்படுவதால் கிராமத்திற்குள் அடிக்கடி தகராறில் ஈடுபடுவது வாடிக்கையாக இருந்தது. இந்த பகுதியில் மதுபானம் விற்கக் கூடாது என பெண்கள் பலமுறை வலியுறுத்தியும் விற்பனை தொடர்ந்தது.

ஆத்திரமடைந்த பெண்கள் 50க்கு மேற்பட்டோர் விற்பனை நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டனர். இதனை கண்டதும் மது விற்றவர்கள் தப்பி ஓடினர். இதைடுத்து பெண்கள் மது பாட்டில்களை தரையில் வீசி எறிந்து உடைத்தனர். இதன் வீடியோவும் வைலாகி வருகிறது .

வத்தலக்குண்டு போலீசார் மதுபானங்களை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்க கலைந்து சென்றனர்.

Advertisement