'தினமலர்' நீட் மாதிரி நுழைவு தேர்வு கள்ளக்குறிச்சியில் 27ம் தேதி நடக்கிறது
கள்ளக்குறிச்சி : 'தினமலர்' நாளிதழ், ஏ.கே.டி., - ஐ.ஐ.டி., நீட் அகாடமி நிறுவனத்துடன் இணைந்து நடத்தும், 'தினமலர் நீட் மாதிரி தேர்வு' வரும் 27ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடக்கிறது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவப் படிப்புகளுக்கான, நீட் தேர்வு, வரும் மே 4ம் தேதி நாடு முழுதும் நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் இத்தேர்வை எழுத தயாராகி உள்ளனர்.
தமிழகம், புதுச்சேரியில் நீட் நுழைவு தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் டாக்டர் கனவினை நிறைவேற்றிட கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவ, மாணவியர்களுக்கு 'தினமலர்' நாளிதழ், கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., ஐ.ஐ.டி., - நீட் அகாடமி நிறுவனத்துடன் இணைந்து, நீட் மாதிரி தேர்வினை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தனித்தனியாக நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்த மாதிரி தேர்வு வரும் 27ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 1:20 மணி வரை, கள்ளக்குறிச்சி நீலமங்கலம் ஏ.கே.டி.,மெட்ரிக் பள்ளி / சி.பி.எஸ்.இ., பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இதற்கு முன்பதிவு செய்திட 98940 09906 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு பெயர், தந்தை பெயர், முகவரி, மொபைல் எண், இ-மெயில் முகவரி, மீடியம் ஆகிய தகவல்களை அளித்து பதிவெண் பெற வேண்டும். தேர்வுக்கான பதிவு எண் தங்களின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.
மாதிரி 'நீட்' தேர்வு என்றாலும், தேசிய தேர்வு முகமை நடத்தும் அசல் தேர்வு போன்றே நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, தேசிய தேர்வு முகமை விதித்துள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் 'தினமலர்' நீட் மாதிரி நுழைவு தேர்விலும் பின்பற்றப்பட உள்ளது. எனவே 'நீட்' தேர்வில் பங்கேற்போர் காலை 9:45 மணிக்கு தேர்வு அறையில் இருக்க வேண்டும். தேர்வு நேரம் முடியும் முன் வெளியே செல்ல அனுமதியில்லை.
நீட் தேர்வுக்கு பல ஆண்டுகளாக பயிற்சி அளித்து வரும் அனுபவம் வாய்ந்த சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, ஒவ்வொரு கேள்விகளும் வடிவமைக்கப்பட்டுள்ளதால், தேசிய தேர்வு முகமையில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து காத்திருக்கும் மாணவர்களுக்கு 'தினமலரின் நீட் மாதிரி தேர்வு' தங்களை சுயமாக பரிசோதித்து கொள்ள அரிய வாய்ப்பு. எனவே, மாணவ, மாணவியர் பதிவு செய்து, தேர்வில் பங்கேற்கலாம்.
மேலும்
-
மகளுக்கு வரதட்சணை கொடுமை; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் போலீசில் கண்ணீர் புகார்!
-
சவுக்கு சங்கர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை
-
உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
சென்னையில் கொட்டியது கனமழை; சூறைக்காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் சிரமம்!
-
மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் தற்கொலைக்கு முயற்சி: சேலம் பஸ்ஸ்டாண்டில் அதிர்ச்சி!
-
ராமதாஸ் வழிகாட்டுதலில் சித்திரை நிலவு மாநாடு; அன்புமணி பேட்டி