ரிஷிவந்தியத்தில் சாலை மறியல்
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியத்தில் வி.சி., கட்சி சார்பில் வைக்கப்பட்ட பேனர் கிழிக்கப்பட்டதை கண்டித்து அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ரிஷிவந்தியம் பெருமாள் கோவில் பஸ் நிறுத்தம் அருகே, அம்பேத்கர் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வி.சி., கட்சி சார்பில் பேனர் வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் பேனரை கிழித்துள்ளனர். இதை கண்டித்து மாவட்ட செயலாளர் வேல் பழனியம்மாள் தலைமையில், 30க்கும் மேற்பட்டோர் ரிஷிவந்தியம் பெருமாள் கோவில் பஸ் நிறுத்தம் அருகே நேற்று மதியம் 12:30 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ரிஷிவந்தியம் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
அதனையேற்று, மறியலில் ஈடுபட்டவர்கள் 12:35 மணியளவில் கலைந்து சென்றனர். தொடர்ந்து, கிழிக்கப்பட்ட பேனருக்கு பதிலாக மீண்டும் புதிய பேனர் வைக்கப்பட்டது.
மேலும்
-
போலி ஆவண மோசடி ஒருவர் கைது
-
விநாயகா மிஷன்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு விழா
-
சனீஸ்வரர் கோவில் சித்த குரு பீடம் இன்று மகா கும்பாபிேஷகம்
-
போதை ஆசாமி திருடி சென்ற கார் மோதி 2 பேர் படுகாயம்
-
கரும்புக்கு நிலுவை தொகை கேட்டு பெட்ரோலுடன் வந்த விவசாயிகளால் பரபரப்பு
-
அழகர் அணை திட்டம் நிறைவேற்ற வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்